• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இனி வாட்ஸ் அப் பயன்படுத்த தனியாக கட்டணம்!!

ByA.Tamilselvan

Sep 5, 2022

இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வழியாகச் செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராயின்(TRAI) கோரிக்கையை தொலைத்தொடர்பு நிறுவனம் பரிசீலனை செய்ய உள்ளது.
மக்கள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியாகவும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இதில் ஆடியோ கால் மட்டுமின்றி வீடியோகால், மேலும் குழுவாகச் சேர்ந்து பேசும் க்ரூப் சாட் ஆகியவையும் உள்ளது.
தற்போது வரை இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த சேவைகளை இனிமேல் கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், இந்தியத் தொலைத்தொடர்பு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
அவ்வாறு ட்ராயின் கோரிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு துறை ஏற்கும் பட்சத்தில், தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகிள் டியோ, சிக்னல், மற்றும் டெலிகிராம் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வரும் இலவச சேவைகள் அனைத்தும் இதன் பிறகு கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும்.