• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச் .ராஜா காரைக்குடியில் பேட்டி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச் ராஜா மழைக்காக ஊராட்சி நகர்ப்புற தேர்தல் தள்ளிப் போனாலும் நிவாரணங்கள் வழங்கி முடித்த பின்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


உள்ளாட்சி நகர்புற தேர்தல் தள்ளிப்போனால் மத்திய அரசிடமிருந்து வரும் நிதிகள் தடைபடும் என்ற எச்.ராஜா, கொரானா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அதனை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது என்றும் கூறினார்.


ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் ஒன்றிரண்டு தான் உள்ளது. அதுவும் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ளது என்றும், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.