• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மலையாள நடிகர் சங்கத் தலைவராக நடிகர் மோகன்லால் மீண்டும் தேர்வு..!

2021 – 2023ஆம் ஆண்டுக்கான மலையாள நடிகர் சங்கத்திற்கு நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் நடிகர் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் வருகிற 19ம் தேதி 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுகிறார்.

இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது.