• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செல்வராகவன் – தனுஷ் இணையும் படத்தின் அப்டேட்ஸ்!..

Byமதி

Oct 14, 2021

காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களுக்கு பின் செல்வராகவன். மற்றும் தனுஷ் கூட்டணியில் எப்போது படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்தவகையில் இவர் இருவரும் அடுத்ததாக இணைய உள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.