• Mon. Apr 21st, 2025

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் தேர்வு

ByKalamegam Viswanathan

Jan 27, 2025

தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.

குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளுதல், காவல் நிலையத்தில் சுகாதாரம் – தூய்மையைப் பேணிக்காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2025-ம்ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் C3 – S.S. காலனி காவல் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்கான தமிழக முதல்வர் கோப்பை -யை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து C3 – S.S. காலனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் காசி கோப்பையை பெற்றுக்கொண்டார்.