மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வரை உடைப்பை அதிகாரிகள் சரி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக குழாயிலிருந்து குடிநீரானது மலமளவென வெளியேறி அருகில் உள்ள சாலை மற்றும் வைகை ஆற்றுக்குள் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். குடிநீரானது மலம் அளவான வெளியேறிச்செல்லும் நிலையில் அருகில் உள்ள பகுதிகள் பள்ளம் அதிகமாகி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வைகையில் நீர்மட்டம் குறைந்து வைகை அணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் சோழவந்தான் மேலக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வைகை ஆற்றுப்பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் தான் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் நகராட்சிக்கு செல்லக்கூடிய இந்த இந்த குழாயில் மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வரை குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குடிநீர் வெளியேறி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதை பார்த்தாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர்.




