• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தடைசெய்யப்பட்ட 25 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 5,70,000 – பறிமுதல்..

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று ஆரல்வாய்மொழி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வன் அவர்களுக்கு தெற்கு திருப்பதிசாரம் அருகே குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றார்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் குலசேகரம் பகுதியை சேர்ந்த முகமது சபீக், சையத் அலி, அம்ஜத் மற்றும் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த சபீர் கான் என்பது தெரியவந்தது.

அவர்களை தீவிர விசாரணை செய்து, அந்த இடத்தை சோதனை செய்த போது அவர்கள் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்பு அவர்களிடமிருந்த 25 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் 5,70,000 /- ரூபாயை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.