• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மோடி உருவபொம்மை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர் – தடுத்து நிறுத்திய காவல் துறை!..

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும் மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவபொம்மை எரிக்க முற்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும், உ.பி.யில் விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கார் ஏற்றிகொண்ட மத்திய அமைச்சரின் மகனை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும் மோடி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவபொம்மை எரிக்க முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் உருவபொம்மைகளை பறித்து போராட்டம் செய்தவர்களை கலைந்துபோக செய்தனர்.