சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,” சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல். சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்.
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய அனுமதி மறுக்கப்பட்டது. திமுகவிற்கு கருப்பு மேல என்ன வெறுப்பு? நீட் தேர்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? கருப்பு ஆகாது என்றால் திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீர்களா?
தமிழ்த்தாய் வாழ்த்தில் 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே?
நான் அதிகாரத்திற்கு வந்தால் எங்க தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் போடுவேன். அந்த பாட்டை போட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.