• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை ஸ்டாலினை புகழ்ந்த சீமான்

ByA.Tamilselvan

Sep 29, 2022

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த சீமான். பெட்ரோல் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் மனதில் மதவெறியைத் துண்டி , தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டுருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி . இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.