• Tue. Mar 19th, 2024

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை

ByA.Tamilselvan

Sep 29, 2022

இலங்கையில், பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இலங்கையில் போராட்டங்கள் குறைந்த நிலையில், தற்போது வரை உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில், ‘ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் ரம்புலெல்லா மறுத்துள்ள அவர், அரசியல் உந்துதல் காரணமாக பொது சுகாதார ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *