

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இவருக்கும், மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது! இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார், டி.இமான். பின், டிசம்பர் 29-ஆம் தேதி டிவிட்டரில் , “நானும் மோனிகா ரிச்சர்டும் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்கிறோம்” என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.. மணப்பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் உமா என்றும், இவர்கள் இருவருக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.