கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ள படம் மாறன்! நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரில் தனுஷ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இடம்பெற்றிருந்த காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தன. ட்ரெயிலரில் டயலாக்குகளும் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. ஸ்மிருதி வெங்கட், தனுஷின் தங்கையாக நடித்துள்ளார்.
படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார் சமுத்திரகனி. மேலும் மகேந்திரன், அமீர், பிரவீன், கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன் போன்றவர்களும் நடித்துள்ளனர். தொடரி, பட்டாஸ் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷுடன் இந்தப் படம் மூலம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்
படத்தின் டயலாக் மற்றும் திரைக்கதையை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள நிலையில் தற்போது கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக மாறன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய வளர்ச்சிக்கு மாறன் தொடக்கப்புள்ளியாக இருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரட்டை மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்திலிருந்து சமீபத்தில் ஒளிப்பதிவளர் தினேஷ் கிருஷ்ணன் விலகிய நிலையில், தற்போது மாறன் படத்திலிருந்து விவேக் விலகியுள்ளது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனுஷ் படத்திலிருந்து விலக இவர்கள் காரணங்களை கூறினாலும் என்னதான் நடக்கிறது என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

