• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பருவ மழைப்பொழிவு காலநிலை மற்றும் தட்பவெட்ப நிலை…

ByAlaguraja Palanichamy

Jul 18, 2022

பருவமழை

மான்சூன் என்று சொல்லானது மவுசிம் (Mausim) என்று அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் பருவங்கள் (Seasons) என்பதாகும் பருவக்காற்று உள்ளானது தென்மேற்கு பருவக்காற்றுகள் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுகள் எனப் பிரிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவக்காற்று ஆனது தென்னிந்திய மற்றும் தேன் பசிபிக் பெயராளிகளிலிருந்து ஆசிய பகுதிகள் நோக்கி வீசுகின்றது. மாறாக வடகிழக்கு பருவக்காற்றுகள் ஆசியாவின் உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்தியா மற்றும் பசுபிக் பேராலய நோக்கி வீசுகின்றது.

பருவக்காலங்கள்

நான்கு பருவ காலங்கள் அடையாளம் கண்டுள்ளனர்

  1. குளிர் காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
    2.கோடைகாலம்: மார்ச் முதல் மே வரை 3.தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை
    4.வடகிழக்கு பருவக்காற்று காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை
  2. குளிர் காலம் அல்லது குளிர் பருவம்

இக்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள மகர ரேகையில் மீது செங்குத்தாக விழுகிறது இதனால் இந்திய பகுதி சாய்வான சூரியக்கதிர்களை பெறுகிறது இதுவே குறைந்த வெப்பத்திற்கு காரணமாக உள்ளது.தெளிவான வானம் சிறந்த வானிலை மென்மையான வடக்கு காற்றுகள் குறைந்த இறப்பதம் மற்றும் மிகுந்த தினசரி பகல் பகல் நேர வெப்ப வேறுபாடுகள் ஆகியன பருவத்தில் குணாதிசயங்கள்

இப்பருவத்தில் வட இந்தியாவில் ஓர் உயர் அழுத்த உருவாகி காற்று வடமேற்கிலிருந்து சிந்து கங்கை பள்ளத்தாக்குகள் வழியாக வீசுகிறது. தென்னிந்தியாவில் பொதுவாக காற்று ஆனது கிழக்கிலிருந்து மேற்காக வீசுகிறது. ஒரு நாளின் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலையானது தென்னிந்தியாவில் 22 டிகிரி செல்சியஸிலிருந்து வடக்கு சமவெளிகளில் 10 டிகிரி செல்சியஸ் ஆகவும் பஞ்சாப் சமவெளிகளில் 6 டிகிரி செல்சியஸ் உள்ளது. மேற்கு இமயமலை தமிழ்நாடு கேரளா ஆகிய பகுதிகள் பருவத்தில் மழை பெருகின்றன.

தென்னிந்தியாவின் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தாழ்வழுத்தம் உருவாகிறது இதன் விளைவாக காற்றானது உயிர் அழுத்த பகுதியிலிருந்து தென்னிந்தியாவை நோக்கி வீசுகிறது இந்த காற்றுக்கு பின்னடைவும் பருவக்காற்று (Retreating Monsoon)என்று பெயர். இக்காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவதால் மலை அதிகம் தருவதில்லை ஆனால் இக்காற்று வங்காள விரிகுடாவே கடக்கும் பொழுது சிறிதளவு ஈரப்பதத்தை பெறுவதால் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு குளிர்கால மழையை தருகிறது இதுவே பின்னடையும் பருவக்காற்றில் முக்கிய அம்சமாகும்.

இந்தியாவில் குளிர்காலத்தில் மத்தியத்தரை கடலில் ஒரு தாழ்வு அழுத்தம் உருவாகி கிழக்கு நோக்கி நகர்ந்து ஈரான் மற்றும் கடந்து இந்தியாவை வந்தடைகிறது. இத்தாழ்வு அழுத்தம் மேற்கத்திய இடையூறு காற்று என்று அழைக்கப்படுகிறது. இக்காற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஜெட் காற்றோட்டம் முக்கிய பங்கு வைக்கிறது. இக்காற்றானது பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்தில் மழைப்பொழிவையும் ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவையும் தருகிறது. இம்மலை குளிர்கால கோதுமை பயிரிடுவதற்கு மிகவும் பயனளிக்கிறது.

  1. முன் பருவக்காற்று காலம் அல்லது கோடைகாலம்

இப்பருவத்தில் சூரியன் செங்குத்து கதிர்கள் இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது.எனவே வெப்பநிலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது. இப்பருவத்தில் குஜராத் வடக்கு மகாராஷ்டிரா ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்திய பிரதேசத்தில் பல இடங்கள் அதிக பகல் நேர வெப்பத்தையும் குறைந்த இரவு நேர உற்பத்தி கொண்டுள்ளது.

வளிமண்டல அழுத்த நிலையில் வேறுபாட்டால் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளில் காற்றானது தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசுகிறது காற்றுகள் மே மாதத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு முன் பருவகால மழையை தருகின்றன.

“மாங்சாரல்” (Mango Shower) என்ற இடியுடன் கூடிய மலையானது கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் விலையும் ‘ ‘மாங்காய்கள்” விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் அல்லது கால்பைசாகி என்று அழைக்கப்படுகிறது. இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார் மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகிய கால மையத் தருகிறது. அவை வடமேற்கு திசையில் இருந்து வீசுகின்றன. கால்பைசாகி (பைசாக் மாதப் பேரழிவு) என்று அழைக்கப்படுகின்றது. பகர்பொழுதில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலிருந்து வீசும் வலிமையான வெப்பக் காற்று வீசுகிறது. இந்த வெப்பகாற்று “லூ காற்று ” என்று அழைக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை

கோடைகாலத்திற்கு பின் தென்மேற்கு பருவக்காற்றில் தொடக்கத்துடன் மழை காலம் தொடங்குகிறது மே மாதம் இறுதிக்குள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பெரும் பரப்பில் பால் வளர்த்தம் அமைகிறது காற்று கடலில் இருந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது இ காற்றே தென்மேற்கு பருவக்காற்று என்று அழைக்க அழைக்கிறோம்.

  1. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழை காலம்

பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென்பகுதியில் தொடங்கி கொங்கண கடற்கரை பகுதியில் ஜூன் இரண்டாவது வாரத்தில் ஜூலை 15ல் அனைத்து பகுதிகளுக்கும் முன்னேறுகிறது உலக அளவிய காலநிலை நிகழ்வான எல் நினோ தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் தென்னிந்தியாவில் பருவமழை வெடிப்பு எனப்படுகிறது இது இந்தியாவின் வெப்பநிலை பிரமுகர்கள் குறைகிறது காற்று இந்தியாவின் தென் மூளையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாக பிரிகிறது இதன் ஒரு கிளை அரபிக் கடலில் வழியாகவும் மற்றொரு கிளை வங்காளவிரி கூட வழியாகவும் வீசுகிறது.

அரபிக் கடல் கிளை பருவக்காற்றில் அரபிக் கடல் கிளை ஒரு வலிமைமிக்க காற்று அரபிக் கடலில் இருந்து வீசும் காற்றின் ஒரு பகுதி முதலில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதுகிறது ஈரப்பதம் மிக்க காற்று மலைச்சரிவுகளின் வழியே உயர எழும்பி குழிவடைந்து மேற்கு கடற்கரை பகுதிக்கு பலத்த மழை தருகிறது மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மோதும் திசையில் அமைந்துள்ள மும்பை 150 சென்டிமீட்டர் மலையும் மேற்கு தொடர்ச்சி மலையின் மறைவில் உள்ள மலை மலை பிரதேசத்தில் உள்ள பூனா 50 சென்டிமீட்டர் மலையும் பெறுகின்றன இதன் இரண்டாவது பகுதி விந்திய சாத்புறம் மலைகளின் வழியே சென்று ராஜ் மஹால் குன்றுகளின் மீது மோதி சோட்டான் நாக்பூரி பீடபூமிக்கு அதிக மழை பொழிவை தருகிறது இ காற்றின் மூன்றாவது பகுதி ராஜஸ்தானி நோக்கி நகர்கிறது அங்கு ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது அதனால் இக்காற்று மழை மீது மோத இயலாததால் ராஜஸ்தானுக்கு மழை பொழிவை தருவதில்லை இதனால் தான் மேற்கு ராஜஸ்தானின் ஒரு பகுதியை பாலைவனமாக அமைந்துள்ளது சிவாலி குன்றுகளால் தடுக்கப்படுவதால் அவற்றின் மலை அடிவாரத்தில் நல்ல மழைப்பொழிவை தருகின்றன.

காற்று மோதும் ஏறும் பக்கம்

காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிக்கை காற்றும்போதும் பக்கம் என்கிறோம் மலையின் மறுபக்கம் சரிவு காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ளதால் அதன் காற்று மோத பக்கம் என்கிறோம்.

வங்காள விரிகுடா கிளை

வங்காள விரிகுடாவில் இருந்து வீசுமை காற்று ஆனது ஈரப்பதத்தை தாங்கி வரும் காற்றாகும் இது காசி காரோ ஜெயந்தியா குன்றுகள் மீது மோதுகிறது ஈரப்பதம் தாங்கி வரும் இக்காட்டு ஆனது புனல் வடிவ குன்றுகளின் மீது மோதி திடீரென மேலே எழும்புவதால் இந்தியாவிலேயே அதிக மழை பெறும் இடமான மெளசின்ராம்க்கு கனமழையே தருகிறது.

யூ காற்றின் ஒரு பகுதி இமயமலைகளால் தடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்து கங்கை சுமவலிக்கு மலையை தருகிறது இது மேலும் மேற்கு நோக்கி நகர நகர தமிடமுள்ள ஈரப்பதத்தை இழப்பதால் பஞ்சாப் மற்றும் கரியாவினருக்கு மிகக் குறைந்த அளவு மலையைத் தருகிறது இறுதியாக வங்காள விரிகூட கிளை காற்று அரபிக் கடற்கரையுடன் சேர்ந்து இமயமலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழை பொழிவை தருகின்றன இந்த பருவத்தில் தமிழ்நாட்டின் வறண்ட நிலையை காணப்படுவதால் ஏனெனில் இது அரபிக் கடல் கிளை காற்றுக்கு மலை மறைவு பகுதிகளில் பகுதிகளிலும் வங்காள விரிகுடா கிளைக்காற்றுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75% மழை பொழிவானது இப்பருவக்காற்று களத்தில் கிடைக்கிறது தமிழ்நாடு மழை மறைவு பகுதிகளில் அமைந்துள்ளதால் குறைவான மழை பொழிவு பெறுகிறது .

  1. வடகிழக்கு பருவக்காற்று காலம் அல்லது பின்னடையும் பருவக்காற்று காலம்

செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியில் இருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது.

பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் கொரியாலிசிஸ் விசை காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கில் இருந்து வீசுகிறது எனவே காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது.இப்பருவகாலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் வட கிழக்கு காற்று தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம் இப்ப பருவக்காற்றில் மூலம் கேரளா ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவில் உட்பகுதிகள் நல்ல மழை பொழிவு பெறுகின்றன இப்பகுதிகள் மொத்த மழைப்பொழிவில் சுமார் 35 சதவீதத்தை பெறுகின்றன. புயல் வங்காள விரிகுடாவில் இருந்து தோன்றுவதால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள் நல்ல மழைப்பொழிவு பெறுகின்றன.

அதிகப்படியான மழைப்பொழிவு புயல் மற்றும் வேகமாக வீசும் காட்டினாள் கடலோரப் பகுதிகளில் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் பகல் நேர வெப்பமானது குறைய தொடங்கியது அக்டோபர் மாதத்தில் சராசரி வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸிலிருந்து வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் 28 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை குறைகிறது. உலகில் மிக அதிக அளவு மழை பெறும் 1187 சென்டிமீட்டர் பகுதியான மெளசின்ராம் (Mawsynram) மேகலாயாவில் அமைந்துள்ளது.

ஆண்டு முழுவதும் சீரற்ற மலைப் பரவல்

நம் நாட்டின் 80 சதவீதம் மலைப்பொழிவிற்கு காரணமாக அமைவது ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் தென்மேற்கு பருவக்காற்று ஆகும். அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து நவம்பர் மாதத்தில் சில பகுதிகளில் இருந்து பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது.

மலைகளின் செல்வாக்கு

கடலினால் அதிக மழைப்பொழிவு இருந்த போதிலும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் வழியாக வீசினாலும் மலைகள் குறுக்கே காணப்படாததால் மழைப்பொழிவு ஏற்படுவதில்லை மேற்கு கடற்கரை ஓரத்தால் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது மேகக்காற்று வீசுவதால் அதிக மழைப்பொழிவு பெறுகிறது.

எடுத்துக்காட்டாக ஷில்லப்பீடபூமி 1270 சென்டிமீட்டர் அளவு ஆண்டு மழை பொழிவை கூட மலை மறைவு பகுதியில் உள்ள அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் மத்திய பகுதி 163.7 சென்டிமீட்டர் அளவு ஆண்டுதோறும் மழை பொழிவை பெறுகின்றன.

வெப்ப மண்டல புயல் காற்று

மழையின் தீவிரமும், மழை பரவிலும் தொடர்ச்சியாக ஏற்படும் வெப்பமண்டல காற்றழுத்த அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன.ஜூன் முதல் செப்டம்பர் வரை வங்காள விரிகுடாவில் தோன்றி நிலப்பகுதியை கடந்து செல்கின்றன. வானிலை எழில் புயல் என்பது சூழல் காற்று என்று குறிப்பிடப்படுகிறது இது வட கோளாறகத்தில் கடிகார முள் திசை திசைக்கு எதிர் திசையில் சூழலும் பண்பையும் மேற்கு கிழக்கு தென்கோளாரத்தில் கடிகார முள் திசையிலும் திசையிலும் சுற்றும் பண்பை கொண்டிருக்கும்.

மழைப்பொழிவின் நிலையற்ற தன்மை

ஒரு பருவ காலத்தில் அதிக மழை பெறும் அதே பகுதி அடுத்த பருவ காலத்தில் வறட்சிய அனுபவிக்கலாம். பருவமழை துவக்கம் தாமதப்படலாம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு வாரத்திற்கோ அல்லது அதற்கு மேலோ மலை பேயாக இருப்பதால் பருவமலையின் தொடர்ச்சியின் இடைவெளி ஏற்படலாம்.

நாட்டின் பொருளாதாரத்தில் பருவமழையின் பெரும் தாக்கம்

இந்திய நாட்டின் வளமை பருவ மழை பெய்வதையோ அல்லது பொய்வதையோ பொறுத்து அமைகிறது கோடைகால மழை ஒரு ஆண்டின் மழைப்பொழிவு சராசரியாக 1187 சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை மாறுபடும்.

உலகிலேயே அதிக மழை பெறும் அவசியம் என்ற இடம் சிரபுஞ்சிக்கு மேற்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இதன் சராசரி மழைப்பொழிவு 1187 சென்டிமீட்டர் ராஜஸ்தானில் உள்ள தார்பாலைவனம் 25 சென்டிமீட்டர் குறைவான மழை பொழிவை பெறுகிறது.

குளிர்கால மலைப்பொழிவு

தமிழ்நாட்டில் வட கிழக்கு காற்றானது வங்காள விரிகுடாவில் அக்டோபர் மாதத்தில் உருவாகி பின்னடையும் கோடை பருவக்காற்றுடன் கலக்கிறது. உள்நாட்டு பகுதிகளை விட கடற்கரையோர பகுதிகள் அதிக மழைப்பொழிவை பெறுகின்றன உள்நாட்டை நோக்கி செல்லச் செல்ல மழை அளவு குறைகிறது.

ஜெட் காற்றுகள் (Jet Stream)

ஜெட் காற்றுகள் என்பது அதிக உயரத்தில் ஆறு கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டர் உயரம் வீசக்கூடிய மேற்கத்திய காற்று அமைப்பாகும். இவை துருவங்களை சுற்றி வருவதால் அதை துருவங்கள் சுற்றும் காற்று ( Circum Polar Wind System( என அழைக்கின்றோம். ஜெட் காற்றுகளின் அலை அலையான வடிவத்திற்கு ராஸ்பி அலைகள்( Rossby Waves) எனப்பெயர்.

ஜெட் காற்றின் தீவிரமான தாக்கம்
இரண்டாவது உலகப் போரின் போது உணர்ந்த வலிமையான காற்று.வட அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் குளிர்காலத்தில் கடுமையான குளிர் அலைகளை உருவாக்குகிறது.இந்திய துணை கண்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று திடீர் மழை பொழிவை ஏற்படுத்துகிறது. ஜெட் காற்று விலகும் விகிதத்தை பொறுத்து தென்மேற்கு பருவக்காற்று ஆனது தாமதமாகவோ அல்லது முன்பாகவோ வீசுகிறது.

புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிசாமி, காலநிலை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர்