உயிருக்கு போராடிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி!! மகனை கைது செய்து காமநாயக்கன்பாளையம் போலீசார் நடவடிக்கை!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் எல்லைக்கு உட்பட்ட பொங்கலூர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இன்று அது போதையை தலைக்கேறிய நிலையில் வீட்டில் சமைத்த உணவு சரியில்லை என தகராறு செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உக்காந்தசாமியின் மகன் மகேஷ் அருகில் இருந்த அறிவாலை எடுத்து கந்தசாமியின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளார், இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கந்தசாமியை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மகேசை கைது செய்த போலீசார் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அவங்க அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பல்லடம் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை மகனே அறிவாளால் வெட்டி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
