• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சோழ மன்னர்களின் பள்ளிப்படைக் கோயில்கள்.! கோரிக்கை வைக்கும் முதுமுனைவர் அழகுராஜா..

ByA.Tamilselvan

Oct 6, 2022

தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் பட்டியல் வெளியேற்றம் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பேராசிரியர், முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. இது குறித்து அவர் பேசுகையில்,

சோழ மன்னர் பரம்பரையில் வந்த புகழ்பெற்ற ஒருவர் இறந்தால் அவர் சமாதியின் மீது சிவலிங்கத்தை வைத்து கோயிலைக் கட்டி எழுப்புவார்கள் அந்தக் கோயில்களுக்கு பெயர் பள்ளிப்படைக் கோயில்கள் என்று பெயர்.!

2010-ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது ராஜராஜ சோழனின் சமாதி பற்றிய சர்ச்சை எழுந்தது.! அப்பொழுது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களிடம் தமிழக தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர்.அந்த அறிக்கையில் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்த இடங்களின் பெயர் பள்ளிப்படைக் கோயில்கள் என்றும். ஒவ்வொரு பள்ளிப்படைக் கோயிலிலும் எந்த சோழ மன்னரை அடக்கம் செய்து இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் பள்ளிப்படை கோயில் கல்வெட்டுகளில் உள்ளன என்று கூறினார்கள். இது பற்றிய செய்திகள் 2010 ஆம் ஆண்டு “தமிழகஅரசியல்” வார இதழில் வெளிவந்தது.

தமிழகத்தில் பள்ளி என்கிற வார்த்தையுடன் தொடர்புடைய சமூகங்களாக வன்னியர் (பள்ளி), தேவேந்திரர் (பள்ளர்) ஆகிய இரு சமூகங்கள் மட்டுமே இருந்து வருகின்றன.1989 ஆம் ஆண்டு மதுரை தமக்கு மைதானத்தில் என்னுடைய பெரியப்பா அன்பு தேவேந்திரர், வடக்கே வன்னியர், தெற்கே தேவேந்திரன் என்ற மிகப்பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார் அந்த மாநாட்டின் தலைமை ஏற்க தாத்தா மருத்துவர் ராமதாஸ், சமூகப் போராளி அண்ணன் ஜான் பாண்டியன், போன்றவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பாமக கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பதவியும் மற்ற பதவிகளும் வகித்தனர். அந்த மாநாட்டில் ஆறு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படுத்தியது. வன்னியரும் மற்றும் தேவேந்திரர் ஒரு வயிற்றில் பிறந்த ஒரு தாய் மக்கள் என்று மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார் தாத்தா மருத்துவர் ராமதாஸ். இதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வடக்கில் வாழும் வன்னியரும், தெற்கில் வாழும் தேவேந்திர்களும் “ஒரு தாய் பிள்ளைகள்” என்று கூறுவார்.

பல்லவர்கள் ஆட்சி காலத்தில் தான் காவிரிக்கு வடக்கே பள்ளி என்றும் காவேரிக்கு தெற்கே பல்லு என்றும் பிரித்து விட்டார்கள். தமிழகத்தில் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயமாக இருக்கின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மக்களாக மாறிவிடுவார்கள் என்ற காரணத்தினால் இரண்டு திசைகளாக பிரித்து விட்டனர். ஆகையினால் வடக்கு தற்போது பார்த்தால் ஒருவர் கூட தேவேந்திர குல வேளாளர் என்று சான்றிதழ் இருக்காது, அதுபோல் தெற்கே பார்த்தால் வன்னியர் என்று ஒரு சான்றிதழ் கூட இருக்காது. இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது, இது ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சியாக இருந்தாலும் தமிழகத்தில் இன்று ஒற்றுமையுடன் நாம் செயல்பட்டு வருகிறோம். 1989 ஆம் ஆண்டு வன்னியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தார்கள், 1989 ஆம் ஆண்டு மாநாட்டிற்கு பிறகு 6 லட்சம் பேர் கூடிய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் வன்னியரும் தேவேந்திரனும் ஒன்றுதான். அவர்கள் பட்டியல் இனத்தில் உள்ளனர், நாங்கள் மட்டும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளோம். அவர்களையும் பிற்படுத்தப்பட்டியில் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் எங்களை பட்டியல் இடத்தில் சேர்க்க வேண்டும் என்று முழக்கமிட்டார். தாத்தா மருத்துவர் ராமதாஸ் 1991 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்கள் சேர்க்கப்பட்டன.

1991 ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து ஐவர் குழு வருகை தந்தது. தேவேந்திரகுல வேளாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டியில் சேர்க்க இக்குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தியது, அப்போது தமிழ்நாட்டில் இருக்கும் சமூக போராளிகள் என்ற போர்வையில் ஒரு ஐந்து நபர்கள் இதனை எதிர்த்து நாங்கள் பட்டியலில் தான் இருப்போம் என்று கோரிக்கை வைத்து டெல்லியில் இருந்து வந்த குழுவை திருப்பி அனுப்பி விட்டனர். இல்லை என்றால் நாம் 1990 லே மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்போம். அரசியல் நோக்கங்களுக்காக நமது சமுதாய அரசியல் போராளிகள் என்ற போர்வையில் இருக்கும் நபர்கள் செய்த காரியம் தான் இது. இப்போது இந்த அரசியல் தலைவர்களே இதற்கு கடுமையாக எதிர்த்து பட்டியல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு செய்திருந்தால் இன்றைக்கு பொருளாதாரத்தில் 200 மடங்கு வளர்ச்சி விட்டு இருக்கலாம். 30 ஆண்டுகள் ஆகிவிட்டது, கால கடந்து விட்டது, இனி ஒருபோதும் பொறுக்கக் கூடாது பட்டியல் வெளியேற்றமே நமது இலக்கு. 1939 ஆண்டுக்கு முந்தைய இருந்த பிசி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை திருப்பிக் கொடுத்தால் போதும், இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிஜேபி தேசிய தலைவர் நட்டா, தமிழ்நாட்டின் தேவேந்திர வேளாளர் சமூகத்தில் மகா குரு மூர்த்தி ஜி உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பட்டியல் வெளியேற்றம் கொடுக்க வேண்டியது மாநில அரசு கிடையாது, மத்திய அரசு மட்டுமே.. உடனடியாக இதனை தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்கு நிறைவேற்றித் தருமாறு பேராசிரியர், முதுமுனைவர், அழகுராஜா பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.