• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆபத்தை உணராமல் பேருந்தில் பள்ளி மாணவர்கள்..,

ByKalamegam Viswanathan

Jun 10, 2025

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கண்டித்தாலும் அவர்களை மீறி சில தங்கள் உயிரை துச்சமாக கருதி ஃபுட் போர்டு பயணம் ஜன்னலில் தொங்கி செல்வது போன்று பயணங்கள் மேற்கொள்ளும் காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து தான் வருகிறோம்.

இந்நிலையில் நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் மதுரையை சேர்ந்த அரசு மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் கும்பலாக தொங்கியபடி செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது பேருந்தில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவர் ஒருவர் மீது ஷேர் ஆட்டோ ‌ உரசியதில் மாணவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அரசு பேருந்து படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ள சூழலில் மாணவர்கள் கும்பலாக ஒரே சமயத்தில் இது போன்று பயணிப்பது பெரும் விபத்தை ஏற்படுத்தும்‌ எனவே சிதறலடைந்த அரசு பேருந்துகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலை மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க வேண்டும் எனவும் அவ்வாறு இயக்கினால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.