சாத்தூர் நகர கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுக்கான கழக அமைப்பு தேர்தல் விண்ணப் படிவத்தை கழக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டுனர்.

கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் R.K. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர் நகரத்திற்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகளுக்கான கழக அமைப்பு தேர்தல் விண்ணப்ப படிவம் தேர்தல் பொறுப்பாளர்களான புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகத்தை சார்ந்த மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.சரவணன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பெரியசாமி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திரு.பழனி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் திரு.செல்லையாவிடமிருந்து சாத்தூர் நகர கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் விண்ணப்ப படிவத்தை பெற்றனர்.

இந்நிகழ்வில் சாத்தூர் நகர கழக செயலாளர் MSK. இளங்கோவன் மற்றும் நகர கழக, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.