• Sat. Apr 20th, 2024

அதிமுகவில் இருந்து விலகிய பாமக, அறிவாலயத்தில் அடைக்கலம் ?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தாங்கள் தோற்றதற்கு கூட்டணி தர்மத்தை மீறி பலரும் துரோகம் செய்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். நாம் தோற்றதற்கு கூட்டணி தான் காரணம் என்று மறைமுகமாக பேசி வந்த ராமதாஸ் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார் சிலரது கருத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம்.

ஆனால், கூட்டணி என்றால் இப்போதெல்லாம் காலை வாருவது என்று அர்த்தம். பாமக வெற்றிபெறக் கூடாது என கூட்டணி தர்மம் அதர்மம் ஆகிவிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். வன்னியர்களின் வாக்கு வங்கி எங்கே போனது. “தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவேன்” என்ற அன்புமணியை நீங்கள் வெற்றிபெறச் செய்யவில்லை.


தனித்து போட்டியிட்டு இருந்தால் நாம் ஆட்சியை பிடித்து இருப்போம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸைமுதல்வராக்க வேண்டும் என்று மாவட்ட செயலார்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும். என்று ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் முழங்கி வந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் கருத்துக்கு பதில் கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாமக எங்கள் கூட்டணியில் இல்லை, கூட்டணியில் இல்லாதவர்கள் பற்றி நாங்கள் என்ன கருத்து கூறுவது என்று கூறியுள்ளார்.


இதனால் தற்போது பாமகவின் திட்டம் தனித்து போட்டியிடுவது இல்லையென்றால் திமுகவுடன் கூட்டணி வைப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மேலும் தங்களது தனித்த செல்வாக்கு என்ன என்பதை சுய பரீட்சை செய்து பார்க்க வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக களம் காணும்.அதில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் திமுகவுடன் சுமூகமாக சென்று விடலாம் என்ற நிலைபாட்டில் ராமதாஸ் உள்ளார்.


திமுக பக்கம் பாமக சாய முழு காரணம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி தான் பாமக வன்னிய மக்களிடம் ஓட்டுகளை கேட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி நிலைக்கவில்லை.மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உலா இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட வழக்கை திமுக தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதனால் இந்த முறை இடஒதுக்கீட்டை காரணம் காட்டி அறிவாலயத்தில் பக்கம் அடைக்கலம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் காத்திருக்கிறார்.இலையில் இருந்து விழுந்த மாம்பழம் கனியுமா என்பதை காலம் கனிந்த பிறகு தான்தெரிய வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *