• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

திராவிட மாடல் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த சத்யராஜ்…

Byகாயத்ரி

Mar 19, 2022

2022-23 ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டை பாஜக மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரை உலக பிரபலங்களும் ஒரு சிலர் இந்த பட்ஜெட் குறித்த கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தபோது இக்கட்டான சூழலில், இருப்பதைக் கொண்டு சிறப்பாக அறிவிக்கப்பட்ட திராவிட மாடல் பட்ஜெட் என்றும் தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.