• Thu. Jan 23rd, 2025

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும்..!

Byகாயத்ரி

Mar 19, 2022

தமிழக பட்ஜெட் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பலர் சில ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் மறுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி கேட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும், நற்பயன்களும் உள்ளடிக்கிய பட்ஜெட்டை வெளியிட்டிருந்தார் நிதியமைச்சர்.ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதாது வேதனையளிப்பாதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வட மாநிலங்களான ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஓய்வூதியத் திட்டம் பற்றி சட்டப்பேரவையில் பேசாமல் போனது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

ஆகவே, வருகின்ற 01.04.2022 அன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக முதல்வரிடம் பேரணியாக சென்று வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசிற்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1800 கோடி இழப்பு ஏற்படுவதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் ரூ.30,000 கோடி உபரி நிதியாக வர வாய்ப்புள்ளது. எனவே, அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதியம் பற்றி நிதித்துறையின் மானியக் கோரிக்கையிலாவது அறவிப்புகள் வர காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிரிநோக்கி காத்திருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ள சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார்(சிவங்கை), சு.ஜெயராஜராஜேஸ்வரன்(மதுரை), பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்(திண்டுக்கல்), நிதிக்காப்பாளர் சி.ஜான்லியோ, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சி.தில்லை கோவிந்தன்(செங்கல்பட்டு), பி.குமார்(சேலம்), சி.கல்யாணசுந்தரம்(கோயமுத்துார்), சி.நவீன்(திருப்பூர்), இன்பராஜ்(திருச்சி), கே.புகழேந்தி(புதுக்கோட்டை), சே.முகமது ஆசிக்(தேனி), எம்.முனிஸ்பிரபு(இராமநாதபுரம்), ஆர்.பிரேமா ஆனந்தி(மதுரை), கே.முனியாண்டி(விருதுநகர்), சக்குபாய்(நீலகிரி).