

சசிகுமார் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ’கொம்பு வச்ச சிங்கம்டா’. . அதேபோல் சசிகுமாரின் ’ராஜவம்சம்’ திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இதில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’ராஜவம்சம்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இதற்கு இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு நடிகரின் இரண்டு படங்கள், ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் இதற்கு முன்பும் பல்வேறு நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி வெற்றி அடைந்துள்ளது குறிப்பிட்டதக்கது.
