விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சசி ஹாஸ்பிட்டல் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை)திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஸ்ரீவில்லிப்புத்துரர் சங்கரலிங்கம் கிளினிக் டாக்டர் இராமநாதன், ஜோசப் கிளினிக் டாக்டர் மேரிஜெனவா, ஸ்ரீவில்லிப்புத்துரர் டாக்டர் இராஜகோபாலன்,சிவகாசி ஸ்ரூதி ஹாஸ்பிட்டல் டாக்டர் மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். சசி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் மோகன்தாஸ், ஆதர்ஸ் மோகன்தாஸ் ஆகியோர்கள் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

விழாவில் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள், ஜெய் தேவர கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் ஜெயக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் மோகன்தாஸ், சசிகலா மோகன்தாஸ், ஆதர்ஸ் மோகன்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.