• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சர்தார் 2-ம் பாகம் விரைவில்– நடிகர் கார்த்தி

ByA.Tamilselvan

Oct 26, 2022

சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ உளவாளியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷிகன்னா நடித்துள்ளார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வந்த விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் 3-வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதனால் சர்தார் 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், ”சர்தார் படம் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் 2-ம் பாகம் எடுக்குபடி ரசிகர்கள் வேண்டினர். எனவே சர்தார் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். இது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.