• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு சுகாதாரப்பணிகள் -பேரூராட்சித் தலைவர் ஆய்வு

ByKalamegam Viswanathan

May 27, 2023

சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 30ந் தேதி அக்னி சட்டி பால்குடமும் 31ஆம் தேதி பூக்குழி திருவிழாவும் 6ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது இந்த நிலையில் தேர் வரும் பாதையான தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணைத் தலைவர் மற்றும் செயல் அலுவலர் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்..