மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மேலும் மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளையும், முன் வைத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்லேண்ட் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும், பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில் மதுரை மாநாகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.