காராமணி குழம்பு:
தேவையானவை:
காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து குக்கரில் போட்டு, தண்ணீர் விட்டு 5 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்திரிக்காய், கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் – சீரக விழுதைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும், வேக வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.