

காய்கறி கட்லெட்
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு – ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு – 3 (தண்ணீரில் முக்கி, உடனே எடுத்து வைக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பொரியல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு, பிரெட், சோள மாவு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, கட்லெட்டுகளாக செய்யவும். இவற்றை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
