• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல் பரிசை தட்டிச்சென்ற சாம்பவிகா பள்ளி மாணவி.., பரிசுகள் வழங்கிய முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்…

ByG.Suresh

Dec 1, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான “சட்டமன்ற நாயகர் – கலைஞர்” குழுவின் சார்பில், கருத்தரங்கம் நிகழ்ச்சி சிவகங்கை சாம்பவிக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்                             மாண்புமிகு ஆர்.ஆவுடையப்பன் தலைமையில், முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ்  முன்னிலையில்,  இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பான கருத்துக்களை வழங்கி முதல் பரிசை தட்டிச்சென்ற சாம்பவிகா பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் சிறப்பாக பேசிய பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன . இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்து, சாம்பவிக்கா பள்ளி தாளாளர் சேகர் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.