• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்..!

ByG.Suresh

Dec 1, 2023

சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சத்தியபாமா தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் எய்ட்ஸ் க்கு டெஸ்ட் தான் பெஸ்ட் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது. தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.