• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 19, 2022

கோவைக்காய் வறுவல்
தேவையானவை:
கோவைக்காய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும். இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட… சுவை சூப்பராக இருக்கும்.