மில்க்மேட் ப்ரூட்சாலட்:
தேவையான பொருட்கள்:
மாதுளம் பழம் – 1 கப் அன்னாச்சிப் பழம் – ஒரு கப் ஆரஞ்சிப் பழம் – ஒரு கப் சப்போட்டா பழம் – ஒரு கப், திராட்சை – ஒரு கப் சாத்துக்குடி – ஒரு கப் ஆப்பிள் – ஒரு கப் பால் – அரை லிட்டர், மில்க்மேட் வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை:
பௌலில், பொடியாக நறுக்கிய சப்போட்டா, திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளம் பழம், ஆரஞ்சு, அன்னாச்சிப் பழம் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு, கால் டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, அத்துடன், காய்ச்சியப் பால் கொஞ்சம், மில்க்மேட் சேர்த்து நன்றாக கிளறினால், சுவையான மில்க்மேட்ப்ரூட்சாலட் தயார்.