• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் முதல் முறையாக சல்மான்கான்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு காட்பாதர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூசிபர் படத்தில் கெளரவத் தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது காட்பாதர் படத்தில் பிரித்விராஜ் நடித்த வேடத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் நடிக்கின்றார்

காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் நிலையில் சிரஞ்சீவியுடன் தான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரியில் படமாக்கி கொள்வதற்கு கால்சீட் கொடுத்துள்ளார் சல்மான்கான். அதனால் சிரஞ்சீவி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் காட்சிகளை பிப்ரவரி மாதத்தில் படமாக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார் டைரக்டர் மோகன் ராஜா. மேலும் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு படத்தில் சல்மான்கான் அறிமுகமாகிறார்.