அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14 வது ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஏழு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி 4 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுனருக்கு ரூ.2,012 அதிகபட்சம் ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடத்துனருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965 அதிகபட்சம் ரூ.6,640 என ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்ததை சிஐடியு, ஏஐடியுசி ஏற்க மறுத்துள்ளது.