• Sun. Dec 1st, 2024

முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக பரவும் தகவல்..!

Byவிஷா

Jul 21, 2022

முன்னாள் உலக அழகியும், இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையுமான ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் ஆகிய சில திரைப்படங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
மேலும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி இருக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்;கு காரணம் அவரது சமீபத்திய புகைப்படங்கள் தான்.
ஆம், அண்மையில் தனது கணவர் மற்றும் மகளுடன் முன்பை விமனநிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட்டையும் போட்டிருந்தார். இதை பார்த்த பாலிவுட் ஊடகங்கள் பல, அவர் கர்ப்பமாக இருப்பதாய் மறக்கவே ஓவர்கோட்டை அணிந்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இதனால், தான் அவர் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் கூட கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *