• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை

ByKalamegam Viswanathan

Jan 19, 2025

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள அஸ்ரத் சுல்தான் பள்ளிவாசலுக்கு கந்தூரியில் ஆடு, கோழி பழியிட போலீசார் தடை வைத்திருந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அஸ்ரத் சுல்தான் பாதுஷா பள்ளிவாசலில் இருந்து மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுக் கிடாயுடன் செல்ல ஐக்கிய ஜமாத்தை சேர்ந்த காதர் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .போலீசார் மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை விதிப்பதாக கூறினார் .இதனை அடுத்து பள்ளிவாசலில் இருந்து காசி விசுவநாதர் கோயில் செல்லும் நுழைவாயில் வரை சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார் .

பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தை அடுத்து இஸ்லாமிய அமைப்பினர் கலைந்து சென்றனர்.திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் செல்பவர்களை கண்காணிக்கமாநகர காவல் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன் மற்றும் அனிதா திருமலை குமார் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர்கள் குருசாமி, சூரகுமார், காட்வின் கேப்ரியேல், சீதாராமன் அடங்கிய 600க்கும் மேற்பட்ட போலீஸார் மலைக்கு செல்லும் பாதை, பெரிய ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் காசி விசுவநாதர் கோவில்,அஸ்ரத் சுல்தான் பள்ளிவாசல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.மாவட்ட வருவாய் அலுவலர் சக்தி வேலு, திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ராஜகுரு ,மதுரை தெற்கு தாசில்தார் ராஜ பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலை பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ளனர்.