• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குன்னூரில் ருத்ராட்சை சீசன்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ்பூங்காவில் தற்போது ருத்ராட்சை காய்கள் சீசன் துவங்கியுள்ளன!

சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த, 1,200 தாவர வகைகள் உள்ளன.

குறிப்பாக, அரிய வகை மரங்கள்,  கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி, டர்பன்டைன் மரங்கள் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, இங்குள்ள மரங்களில், ருத்ராட்ச மரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தற்போது பூங்கா நுழைவு வாயிலில் உள்ள இந்த மரத்தில் காய்கள் அதிகளவில் காய்த்து வருகின்றன. இமயமலை, நேபாளம் போன்ற மலை பிரதேசங்களில் காணப்படும், இந்த வகை ருத்ராட்ச மரங்கள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர், ஜனவரி மாதங்கள் ருத்ராட்சைக்கு சீசன் காலமாக உள்ளது.

இந்த ருத்ராட்ச மரத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்வதுடன், கீழே விழும் காய்களை சில சுற்றுலா பயணிகள் எடுத்தும் செல்கின்றனர்.