• Wed. Apr 24th, 2024

கொந்தளித்த சுனாமி!… அழிந்துபோன தீவுகள்!…

Byகாயத்ரி

Jan 20, 2022

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.அந்த தீவில் உள்ள எரிமலை கடந்த 15-ம் தேதி திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது. சுனாமி அலைகள் டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தன. அவற்றில் சில தீவுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் புகுந்தன.

குறிப்பாக, எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகின. ஃப்னொய்புவா தீவில் இரண்டு வீடுகள் தவிர எஞ்சிய வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது.

பேரழிவிற்கு பிந்தைய பாதிப்பு தொடர்பாக டோங்கோ அரசு வெளியிட்ட முதல் தகவல் இதுவாகும். உயிரிழந்தவர்களில் ஒருவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *