நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த உயர்நீதிமன்றம் கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். ஆகையால், நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பு..!!






; ?>)
; ?>)
; ?>)
