• Sat. Apr 27th, 2024

பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தலித் நில உரிமை இயக்கம் மனு

ByA.Tamilselvan

Sep 26, 2022

தலித் நில உரிமை இயக்கம் சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தேனி கலெக்டருக்கு மனு
தேனி கலெக்டரிம் கொடுக்கபட்ட மனுவில் கூறியிருப்பதாவது… தேனிமாவட்டத்தில் சுமார் 4000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 70சதவீதத்திற்கு மேலான நிலங்கள் பிற சாதியினர் அனுபவத்தில் இருந்து வருகிறது.எனவே பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.மேலும் அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் தேனிமாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் பஞ்சமி நிலம் குறித்த தீர்மானங்களை இயற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கும், ஊராட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் பஞ்சமி நிலங்களின் புலஎண்,அரசுக்கு நிலம் வழங்கிய நபரின் பெயர், நிலப்பரப்பளவு , வழங்கிய தேதி போன்ற விபரங்களை அனைத்து கிராம அலுவலகங்களிலும் விளம்பர பலகையில் மக்களின் பார்வைக்கு காட்சி படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *