• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரூ. 75,000-க்கு ஏலம் போன மாரியம்மன் எலுமிச்சம்பழம்!

ஈரோடு மாவட்டம் பச்சாம்பாளையத்தில் உள்ளது மகா மாரியம்மன் கோவில். இங்கு பொங்கல் திருவிழா கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இருபத்தி ஏழாம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது.

பிப்ரவரி 3ம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால் குடம், தீர்த்த குடம், ஆறுமுகக்காவடி மற்றும் அக்னி கும்பம் எடுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது! அதன்பிறகு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பச்சாம்பாளையத்தில் திருவீதி உலாவும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிலையில் அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. அந்த எலுமிச்சம்பழத்தை கோகுல் ஆனந்த குமார் என்பவர் ரூபாய் 75 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இவ்வாறு அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.