திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல்
கொண்டு சென்ற, ரூ.4 இலட்சத்தி 68 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.




