• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

காவல் நிலையம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி பொது மந்தையில் ஒரு தரபினர் திடீரென்று கோவில் கட்ட முயற்சி செய்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த மற்றொரு தரப்பு பொதுமக்கள் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக இரு தரப்பினரை யும் அழைத்து விசாரித்த போதுஒரு தரப்பினர் பொதுவான கோயில்களில் தங்களை அனுமதிக்காததால் புதிதாக கோயில் கட்டுவதாக தெரிவித்தனர். அதற்கு இனி தாங்கள் அனுமதிப்பதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் அந்த தரப்பினர் கோவில் கட்டுபணியை தொடர்ந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன் மற்றொரு தரபை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
அதனால் குட்லாடம்பட்டி மந்தையில் கோயில் கட்டும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது சம்பந்தமாக இருதரப்பையும் அழைத்து வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் வரும் புதன்கிழமை கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் திடீரென்று இன்று காலை 11 மணி முதல் ஒரு தரப்பினர் திடீரென்று வாடிப்பட்டி காவல் நிலையம் முன்பாக மதுரை திண்டுக்கல் நகர்புறச் சாலை மற்றும் கச்சை கட்டி சாலைகளில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அந்தப் போராட்டத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்து என்று கோஷமிட்டனர். தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ்,
போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி
உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து 12.30 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.