• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இந்த ஆண்டு ரூ.350கோடி கல்விக்கடன் இலக்கு..,
அமைச்சர் செந்தில்பாலாஜி

Byவிஷா

Jun 20, 2022

கோவையில் நடைபெற்ற வங்கிகளின் கல்விக் கடன் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 293 மாணவர்களுக்கு ரூ.44 கோடி கடனுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்..,
இன்னும் 30 நாட்களில் மாணவர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சிபில் ஸ்கோர் அடிப்படையில், வங்கிகள் கல்வி கடன் உதவியை பரிசீலனை செய்வதைத் தவிர்த்து, மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் எதிர்கால நலனில், அக்கறை கொண்டு கடன் வழங்க முன் வர வேண்டும். மாணவர்கள் கல்வி கடன் பெற தங்கள் கல்வி நிறுவனங்களை அணுகலாம் அல்லது வங்கிகளில் நேரடியாக கடன் பெறுவதில் சிரமம் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று கூறினார்.