• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தங்க மகளுக்கு ரூ.3 கோடி பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அசோக் கெலாட்!

By

Aug 30, 2021 ,

பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கிடைத்த முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வீராங்கனை அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதேபோல் இன்று மூன்றாவது நபராக ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தேவேந்திர ஜஜாரியா, 64.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார். இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இந்நிலையில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங்கிற்கு ரூ.1 கோடி பரிசு எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் பவினா பட்டேல் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் போட்டியிலும் ஆளுக்கொரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர். இந்தியாவின் வினோத்குமார் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் இன்று வட்டு எறிதல் போட்டியில், 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.