• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

ByKalamegam Viswanathan

Mar 23, 2025

மதுரை தனக்கக்குளம் வெங்கலமூர்த்தி நகரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி (எ) காளிஸ்வரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .
வீட்டின் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாநகர காவல் மற்றும் புறநகர காவல் இணைந்து குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை தனக்கன்குளம் அருகே உள்ள மொட்டைமலை வெங்கல மூர்த்தி நகரில் இரண்டாவது மனைவி வீட்டில் தங்கியிருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கிளாமர் காளிஸ்வரன் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காளிஸ்வரன் உடலை கைப்பற்றி ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரணை

மதுரை அருகே அரியமங்கலத்தைச் சேர்ந்த கிளாமர் காளி (எ) காளிஸ்வரன் பிரபல ரவுடியான இவர் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மதுரை கீரைத்துறை, தெப்பகுளம் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிளாமர் காளி கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் – சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வெண்கல மூர்த்தி நகரில் தனது இரண்டாவது மனைவி மீனாட்சி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

நேற்று இரவு 9 மணி அளவில் மனைவி மீனாட்சியிடம் தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி, வெளியில் வந்த கிளாமர் காளி வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்தபோது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் கிளாமர் காளியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

காளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வந்த போது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தார். புறநகரின் விரிவாக்க பகுதி என்பதால் இருள் சூழ்ந்த பகுதி என்பதால் கொலை கும்பல் யார் என்ற அடையாளம் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.

கொலை சம்பவம் தொடர்பாக, ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த கிளாமர் காளியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பல்வேறு குற்ற வழக்கு தொடர்புள்ள இவர் முன்னாள் திமுக மண்டல செயலாளர் வி. கே. குருசாமியின் ஆதரவாளர் என்பதும், மற்றொரு பிரபல ரவுடி வெள்ளை காளி இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிக்குப் பலியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும், போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வீ.கே.குருசாமி சகோதரி மகன் காளிஸ்வரன் கொலை சம்பவம் – குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு

முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான காளிஸ்வரன் என்ற கிளாமர்காளி மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெங்கலமூர்த்தி்நகர் பகுதியில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை – உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை – அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர் கோஷ்டியை சேர்ந்த வெள்ளைகாளி தரப்பினர் காளியை கொலை செய்திருக்கலாம் என VK குருசாமி தரப்பினர் சந்தேகப்படுவதால் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு – மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.