• Mon. Dec 9th, 2024

ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் – அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு…

Byமதி

Oct 19, 2021

தூத்துக்குடி ரவுடி துரைமுத்து மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை பிடிக்க முயற்சித்த போது நாடு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றுள்ளன். இதனால் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்தியிலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்த காவல் அதிகாரிகள் ரவுடி துரை முத்துவை கைது செய்யும் போது, காவலர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றதால், என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டான்.

இந்த தூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தை மனித உரிமை அமைப்புகள் கேட்டுக் கொண்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில் தாமாக முன் வந்து ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.