முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், 27 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களும் கைப்பற்றியதாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரெய்டு பற்றி விஜயபாஸ்கர் கூறுகையில், “பொதுவாழ்க்கையில் பயணிக்கும் நாங்கள் இது போன்ற சோதனையை சந்திக்க தயாராக உள்ளோம். சோதனைக்கு முழு ஒத்துழைப்பை நான் கொடுத்தோம். இந்த சோதனையில் என் இல்லத்தில் ஆவணங்களோ, பணமோ, நகையோ பறிமுதல் செய்யப்படவில்லை.
அதே போல கல்வி நிறுவனங்களை தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தொடங்கியதை போல சொல்கிறார்கள். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.