• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பராமரிப்பு காரணமாக பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்…

Byகாயத்ரி

May 6, 2022

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மலையடிவாரத்திலிருந்து வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்து வர வசதியாக கோவில் நிர்வாகம் ரோப் கார் மற்றும் வின்ச் சேவையை இயக்கி வருகிறது.

இதில் ரோப் காரில் இயற்கை அழகை ரசித்தபடி மற்றும் விரைவாக போகலாம் என்பதால் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இது இருக்கிறது. இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகளானது நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் ரோப்கார் சேவையானது நிறுத்தப்படும். அந்த வகையில் தற்போது ரோப்கார் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ரோப்காரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆகவே பக்தர்கள் வின்ச் சேவை மற்றும் படிபாதையை பயன்படுத்தி மலை மீது சென்றுவர கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.