• Fri. Mar 29th, 2024

ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளை…இவனா திருடன்…

Byமதன்

Dec 21, 2021

வேலூர்மாவட்டம், தோட்டப்பாளையத்தில் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு ஆகியோர் நேரில் அந்த இடத்தில் ஆய்வு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் கலர் சாயம் அடித்து நகைகளை திருடி சென்றதும் அவர் முழுமையாக சிங்கம் மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் அப்பகுதி முழுவதும் சாலையில் வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இருப்பினும் அப்பகுதியில் செல்போன் டவரில் எந்தெந்த செல்போன் சிக்கனலில் இருந்தது என ஆய்வு செய்து சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே சிக்னல் ஓர் இடத்திலேயே இருந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் குச்சிப்பாளையம் கிராமத்தை இருசக்கர வாகன திருடன் டீக்காராமனை கைது செய்தனர். விசாரணையில், அவர் நகை கொள்ளையடித்ததை ஒப்புகொண்டார். அதனை தொடர்ந்து, ஒடுக்கத்தூர் பகுதியில் சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த தங்க வைர நகைகளை எடுத்துகொடுத்தார்.

அதன் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட 16 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8 கோடியாகும். இதனை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு பரிசுகள் வழங்கி பாராட்டபடவுள்ளனர். மேலும், இதில் யாருக்காவது தொடர்புள்ளதா? என விசாரிக்கப்படுகிறது. டீக்காராமன் வேறு எங்காவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.

கொள்ளை போன நகைகள் நூறு சதவிகிதம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக கொள்ளையன் 10 நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வளவு நகைகளை கொள்ளையடித்த அவர் ஒரு தங்க ருத்திராட்சத்தை மட்டும் கழுத்தில் அணிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *